Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க டக்ளஸ் பச்சைக்கொடி!

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2026 • 5:58 AM

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க டக்ளஸ் பச்சைக்கொடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், 1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தேன்.
  • வருங்காலத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எழுத்து அளவு:

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தேன். கடந்த பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளேன். அதை நான் ஒரு சறுக்கலாகவே கருதுகின்றேன்; தோல்வியாக அல்ல. வருங்காலத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

என் கைது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், நீதி வெல்லும்; உண்மை விரைவில் வெளிவரும் என நம்புகின்றேன்.” - என்றார்.

சக தமிழ்க் கட்சிகளுக்கும் எனக்கும் இடையில் நேச முரண்பாடே உள்ளது; பகைமை இல்லை. எனினும், சில தமிழ்க் கட்சிகள் என் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலுடன், பயத்தின் அடிப்படையில் செயற்படுகின்றன.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து உறுதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது நல்லது என்றார்.

மேலும், எனது கட்சியை மேலும் செழுமைப்படுத்தி, வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே எனது பிரதான நோக்கம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...