Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

2009க்கு முன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனை பூச்சியம்!

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2026 • 5:44 AM

2009க்கு முன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனை பூச்சியம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்தது.
  • இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே 2009 ஆண்டிற்கு முன்னர் இருந்த வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

எங்களுடைய நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது,குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதை பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.

பலர் இந்த போதைப் பொருளுக்கு நாளாந்தம் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள், போதைப் பொருள் தொடர்பான செய்திகளை நாங்கள் அடிக்கடி பத்திரிகைகள் வாயிலாக பார்க்கின்றோம்.

விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்களுக்குள் ஒழுக்க விழுமியங்களை கொண்டிருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கடந்த கால வரலாறு.

அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்தது.

ஆனால் இப்போது போதைப் பொருள் தொடர்பான புதுப்புது விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.

நான் அனைத்து விளையாட்டு வீரர்களிடமும், விளையாட்டு கழகங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் போதையற்ற ஒரு நல்ல சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவதற்கு இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் எங்களுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

போட்டிகளில் நீங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒரு ஆரோக்கியமான உடலை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆகவே 2009 ஆண்டிற்கு முன்னர் இருந்த வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2009க்கு முன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனை பூச்சியம்! | Tamil Leader | We Lead the Nation