இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது பூமியின் உட்புறத்தில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலும் ரிச்டர் அளவுகோலில் 4.6 அலகுகள் கொண்ட மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.35 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


