Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

'எரிபொருள் நுகர்வைக் குறைக்க QR முறைமை இனி மிகக் கடுமையாக அமல் படுத்தப்படும்!'

T

The Leader Desk

ஜூன் 1, 2026 • 6:35 AM

'எரிபொருள் நுகர்வைக் குறைக்க QR முறைமை இனி மிகக் கடுமையாக அமல் படுத்தப்படும்!'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலங்களில் மேலும் மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
  • இன்று (ஜூன் 01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை அதிரடி உயர்வு காரணமாக, பாரியளவிலான வெளிநாட்டு வினிமயம் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றது.
  • இதனை ஒப்புநோக்கிக் கூறின், ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் காணப்பட்ட எரிபொருள் செலவினம், கடந்த மே மாதமாகும் போது 524 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வெளிநாட்டு வினிமயமாக எரிபொருளுக்காக மாத்திரம் நாம் செலவிட்டுள்ளோம்.
எழுத்து அளவு:

காலங்களில் மேலும் மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவு தணித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அபாயகரமாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு!

ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அநுர கருணாதிலக்க மேலும் விபரிக்கையில்:

"இந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதன் காரணமாக, எமது எரிபொருள் நுகர்வை பெருமளவில் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமை மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகத்தின் ஊடாக நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை எம்மால் செய்ய முடிந்திருந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு வரவில்லை.

தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை அதிரடி உயர்வு காரணமாக, பாரியளவிலான வெளிநாட்டு வினிமயம் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றது. இதனை ஒப்புநோக்கிக் கூறின், ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் காணப்பட்ட எரிபொருள் செலவினம், கடந்த மே மாதமாகும் போது 524 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வெளிநாட்டு வினிமயமாக எரிபொருளுக்காக மாத்திரம் நாம் செலவிட்டுள்ளோம்.

டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தீவிரம்!

இந்த நிலைமையை இனிமேலும் எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, ஒரு நாடாக நாம் சிந்தித்து, எமது எரிபொருள் நுகர்வை எப்படியாவது குறைத்து, நாட்டை விட்டு வெளியேறும் இந்த டொலர்களின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயர்வதற்கு வழிவகுப்பதுடன், மறுபுறம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இதன் காரணமாக, இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும், டிஜிட்டல் அமைச்சு என்ற ரீதியில் நாமும் இணைந்து, தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை இன்னும் சற்று கடுமையான முறையில் அமல்படுத்துவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வைக் குறைத்து, எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவேனும் தணித்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...