திடீரென உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ள இந்த விலை அதிகரிப்பின் முழுமையான விபரம் பின்வருமாறு:
-
அமெரிக்க மசகுஎண்ணெய் (WTI Crude Oil): அமெரிக்க மசகு எண்ணெய் விலை குறியீடானது 2.37 டொலர்களால் அதாவது 2.71 வீதத்தால் (2.71%) அதிகரிப்புத் காட்டியுள்ளது. இதற்கமைய, அதன் ஒரு பெரல் மசகு எண்ணெய்யின் விலை 89.73 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
-
பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent Crude Oil): சர்வதேச சந்தையில் பிரதானமாக கருதப்படும் பிரெண்ட் மசகுஎண்ணெய் விலை குறியீடும் 2.16 டொலர்களால் அதாவது 2.37 வீதத்தால் (2.37%) உயர்வடைந்துள்ளது. இந்த விலை உயர்வின்படி, அதன் ஒரு பெரல் மசகு எண்ணெய்யின் விலை 93.28 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


