வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஏற்பட்ட பாரிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட மேலும் 7 பேர் அவசர அவசரமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனமே, மீகொட சந்தியில் அமைக்கப்பட்டிருந்த அன்னதான வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது அன்னதான வரிசையில் நின்றிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாதுக்க பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும், பிலியந்தலை (Piliyandala) பகுதியைச் சேர்ந்த தம்பதியினரும் (கணவன், மனைவி) உள்ளடங்குகின்றனர் என்பது விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.
விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் சாரதி தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தெரிவித்துள்ளனர்.


