வீடு ஒன்றை 'மேரி லூட்ஸ் விக்ரமசிங்க' (Mary Lourdes Wickremesinghe) என்ற பெயரில் கொள்வனவு செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 'Lankatruth' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"கொழும்பு டொரிங்டன் மாவத்தை, இலக்கம் 260/17 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த வீடானது, நாமல் ராஜபக்ஷவின் CSN தொலைக்காட்சி அலைவரிசையின் முகவரியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த 2002-2004 காலப்பகுதியில், மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டின் மூலம் இந்த வீடு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, குறித்த வீடு ஷிரந்தி ராஜபக்ஷவின் இயற்பெயரான 'மேரி லூட்ஸ் விக்ரமசிங்க' என்ற பெயரில் முழுமையாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக செலவிடப்பட்ட 40 கோடி ரூபா பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இந்தச் சொத்தை விற்பனை செய்வதற்கோ அல்லது வேறு தரப்பினருக்கு மாற்றுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது."


