கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ஒரு தினத்தில் விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை கடைசியாக கடந்த மார்ச் 21ஆம் திகதி திருத்தப்பட்டது. அதன் போது நிலவிய விலைப் பட்டியல் வருமாறு:
-
ஒக்டேன் 92 ரக பெட்ரோல்: ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 398 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது (முன்னைய விலை 317 ரூபா).
-
ஒக்டேன் 95 ரக பெட்ரோல்: ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 455 ரூபாவாக உயர்ந்தது (முன்னைய விலை 365 ரூபா).
-
ஆட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 382 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது (முன்னைய விலை 303 ரூபா).
-
சூப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 443 ரூபாவாக உயர்ந்தது (முன்னைய விலை 353 ரூபா).
-
மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது (முன்னைய விலை 195 ரூபா).


