தொடர்பான புகார்கள் காரணமாக, திசைகாட்டி (மாலிமா) அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வருவதாக அந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு கோரி 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துமூலம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தாம் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகப்போவதாக அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு பதவி விலகத் தயாராக உள்ளவர்களில் இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் உள்ளடங்குவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் 'நெத் நியூஸ்' (Neth News) வானொலியின் 'கணின் கொனின்' (Kanin Konin) விசேட அம்சத்தில் வெளியிடப்பட்டதுடன், இன்று (01) காலை ஒலிபரப்பப்பட்ட பிரதான செய்தி அறிக்கையிலும் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.


