QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி. சூரியபண்டார இன்று சபையில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை ஏற்றுக்கொண்டார்.
-
முறைப்பாடு: QR குறியீடு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைப் பயன்படுத்தி, சில எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பொதுமக்களிடம் சட்டவிரோதமாகப் பணம் அறவிடுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
-
அமைச்சரின் உறுதிமொழி: QR குறியீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் இன்றுடன் தீர்க்கப்பட்டு வருவதால், இவ்வாறான மோசடிகளுக்கு இனி இடமிருக்காது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.
எரிபொருள் விநியோக நடைமுறையில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நிலையங்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறைசார் அமைச்சு மேலும் எச்சரித்துள்ளது.


