Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

COP 28 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு

T

The Leader Desk

மே 23, 2023 • 8:52 AM

COP 28 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.
  • ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.
  • காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது.
எழுத்து அளவு:

இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.

காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்பாட்டில் (UNFCCC) இணைந்துள்ள உறுப்பு நாடுகளிடையே, காலநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்களை வழிநடத்துவதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

மாற்றத்திற்கான கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் புதிய, சமமான தீர்வுகளுக்கு பங்களிப்பைப் பெறுவதும், சமமான வாய்ப்புகளை வழங்குவதும் இந்த மாநாட்டின் குறிக்கோளாகும்.உலகளவில் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை கையாள்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்த அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...