Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

டிக் டொக் வீடியோ - 8 பேர் கைது

T

The Leader Desk

மே 13, 2023 • 4:21 AM

டிக் டொக் வீடியோ - 8 பேர் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணொளியை டிக் டொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
  • காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று (12) இரவு முன்னெடுத்தனர்.
  • நீண்ட நாள் முரண்பாடு காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத் தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
எழுத்து அளவு:

காணொளியை டிக் டொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று (12) இரவு முன்னெடுத்தனர்.

நீண்ட நாள் முரண்பாடு காரணமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத் தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் படுகாயடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதல் நடத்தும் காணொளி பதிவை தாக்குதல் நடத்துவர்களின் முகங்களை மறைத்து டிக் டொக் (Tik tok) செயலில் வெளியிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் 8 பேரை நேற்றிரவு கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும் கூலிக்கு பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் 8 பேரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

  • யாழ். நிருபர் பிரதீபன்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...