Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை

T

The Leader Desk

மே 18, 2023 • 4:16 PM

பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்மையில் (12) பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர்.
  • பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.
  • மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
எழுத்து அளவு:

பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்மையில் (12) பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான துஷ்மந்த மித்திரபால, ரவூப் ஹக்கீம், இரான் விக்ரமரத்ன, உத்திக பிரேமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் இம்மாணவர்களுக்குக் கிடைத்தது.

வடமராட்சி பெண்கள் மத்திய கல்லூரி, தொண்டமனாறு வீரகத்திப் பிள்ளையார் மகா வித்தியாலயம், வல்வை மகளிர் மகா வித்தியாலயம், நெல்லியடி மகா வித்தியாலயம், பொலிகண்டி இந்து கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் வித்தியாலயம், விக்னேஸ்வரா கல்லூரி, கரவட்டி வேலாயுதம் மகா வித்தியாலயம், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் பாடசாலை, கொற்றவற்றை பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரே பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் கலரியானது கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகைதரும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை படைக்கல சேவிதர் திணைக்களம் வழங்குவதுடன், பார்வையிடுவதற்கான சுற்றுலா, செயலமர்வுகளை ஏற்பாடு செய்வது அவற்றுக்குத் தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என்பன பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...