Tamil Leader News
முக்கியம்
புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●
செய்திகள்

7 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்கள்!

T

The Leader Desk

மே 3, 2023 • 11:58 AM

7 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
  • காணிப் பதிவு, தேவையான சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய கொடுப்பனவுகள் பற்றிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ´சொத்துப் பதிவு´ குறித்த செயலணியொன்றும் அமைக்கப்பட உள்ளது.
  • இந்த செயற்பாடுகள் 2023 இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து அளவு:

வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதற்காக வர்த்தக பதிவுக்கான செயலணி உள்ளடக்கப்படும்.

இந்த செயலணியின் ஊடாக டிஜிட்டல் கையொப்ப கட்டமைப்பை உருவாக்குதல், கம்பனி சட்டத்திற்கு இறுதிப் பயனாளிகளின் உரிமையை இணைத்தல் மற்றும் கம்பனி பதிவாளரினால் (RoC) பயன்படுத்தப்படும் படிவங்களை எளிமைப்படுதல் உள்ளிட்ட முக்கிய சேவைகளை வழங்கும்.

காணிப் பதிவு, தேவையான சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய கொடுப்பனவுகள் பற்றிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ´சொத்துப் பதிவு´ குறித்த செயலணியொன்றும் அமைக்கப்பட உள்ளது. நில அளவைத் திணைக்களம், கொழும்பு மாநகர சபை, மேல்மாகாண வருவாய் திணைக்களம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் உட்பட ஏழு நிறுவனங்களை இந்த செயலணியில் உள்ளடக்கும்.

காணி உறுதி விபரங்களை தேடல், இலத்திரனியல் உறுதிப் பதிவு மற்றும் கட்டிடம்/வீதி எல்லைச் சான்றிதழைப் பெறுவதற்கான நேரம், செலவு மற்றும் நடைமுறைகளைக் குறைக்க ஈ-காணி முறைமை இந்த செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

இந்த செயலணி முதன்மையாக கொழும்புப் பகுதியில் அந்தச் செயற்பாடுகளை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, காணிப் பதிவேட்டு தரவுகளை பெற ஒன்லைன் வசதி அளித்தல், முத்திரைக் கட்டணத்தைக் கணக்கிடுவதற்கும், பத்திரங்களைப் பதிவு செய்வதற்கும் ஒன்லைன் வசதிகளை வழங்குதல், காணி ஆவணத்தில் உள்ள திட்ட விபரங்களை இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மாகாணத்துடன் தொடர்புடைய காணிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணைய சேவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காணி பதிவு அலுவலகத்தில் காணி உரித்து தொடர்பான தகவல்களை தேடுவதற்கான ஒன்லைன் வசதி, மேல் மாகாண வருவாய்த் திணைக்களத்திற்கான தானியங்கி முத்திரைக் கட்டணக் கணக்கீட்டு முறை மற்றும் கொழும்பு காணிப் பதிவேட்டில் பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான தானியங்கி முறைமை உள்ளிட்ட சேவைகளை வழங்க இந்த செயலணி மேற்கொள்ளும். இந்த செயற்பாடுகள் 2023 இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலணிக்கு அதன் இலக்குகளை அடைவதற்கு வசதியாகவும், நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழில்நுட்ப அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...