Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

தற்போதைய அரசாங்கம் 69 இலட்சம் மக்களையும் ஏமாற்றுகிறது! எதிர்க்கட்சி

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2021 • 4:47 PM

தற்போதைய அரசாங்கம் 69 இலட்சம் மக்களையும் ஏமாற்றுகிறது! எதிர்க்கட்சி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 69 இலட்சம் மக்களை ஏமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமைந்துள்ளது.
  • இதன்போது ஹர்ஷண ராஜகருணா மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஹர்ஷண ராஜகருணா மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக நாம் சபாநாயகரிடமும் விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களைப் போலவே, இதன் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 69 இலட்சம் மக்களை ஏமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமைந்துள்ளது.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியமை கொரோனா சடலங்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது.

சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விடயத்தையும் சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இன்னொரு விடயத்தையும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுகின்றது.

மேலும், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கூட அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...