Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

6 வயது சிறுவன் இருவரினால் துஷ்பிரயோகம்

T

The Leader Desk

மே 27, 2023 • 5:40 PM

6 வயது சிறுவன் இருவரினால் துஷ்பிரயோகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி.
  • பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குறித்த, அவனுடைய தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:
சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டார்.

திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குறித்த, அவனுடைய தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து சிறுவனின் வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

6 வயது சிறுவன் இருவரினால் துஷ்பிரயோகம் | Tamil Leader | We Lead the Nation