ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயல்

ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான செயல் என்று கூறியிருக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற வெகுசன ஊடக அமைச்சருமான ருவான் விஜயவர்தன தனது முடிவை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று நவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல்  நெருங்கியிருக்கும்  நிலையில், தேர்தலை  தனக்கு  சாதமாக  பயன்படுத்திக்கொள்வதற்காக கடந்த  ஒக்டோபர் செய்த அரசியலமைப்பு சூழ்ச்சியை போன்று  மீண்டுமொரு சூழ்ச்சியை செய்வதற்கான  முயற்சியாக இது அமையலாம் என்ற சந்தேகமும்  தனக்கு எழுந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

வெகுசன ஊடக அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி