ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் கூடிய ஐக்கிய

தேசிய கட்சியின் அதிகமான  முக்கியஸ்தர்கள் பரிந்துரை செய்துள்ளதான பச்சைப் பொய்யான செய்தி ஒன்றை ஊடகங்களினுள் ப்ளான் செய்தது ப்ரோடாபய ராஜபக்ஷவின் கொட்டன்களாலாகும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

நிதி அமைச்சர் மங்கள நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கிற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமான “எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” யாழ்ப்பாண கண்காட்சியின் பணிகளைக் கண்காணிப்பதற்காக நிதி அமைச்சர் அந்த விளையாட்டரங்கிற்கு விஜயம் செய்திருந்தார்.

தாமரை மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் அரசியல் மோசடிக்காரர் எனத் தெரிவித்த அமைச்சர், அவரை “ப்ரோடாபய” என அடையாளப்படுத்தினார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மங்கள, மேலும் இவ்வாறு கூறினார்.

கொட்டன்களின் ப்ளான் நிவ்ஸ்

“உண்மையிலேயே  எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா என்பது இவ்வாறான அரசியல் விடயங்களைப் பேசும் இடமல்ல. எனினும் இங்கு நான் தெளிவாகக் கூற வேண்டியிருப்பது “ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு” என்ற செய்தியை பத்திரிகைகளிலும், அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் ப்ளான் செய்திருப்பது ப்ரோடாபய ராஜபக்ஷவின் கொட்டன்களாகும். இவை பெக்ஸ் நிவ்ஸ்கள்.

உண்மையிலேயே ப்ரோடாபய ராஜபக்ஷ என்ற கோத்தாபய என்பவர் மோசடிகளிலேயே அரசியல் செய்யும் ஒருவர். விஷேடமாக ஐக்கிய தேசிய கட்சியில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி காட்டுவதற்கு கொட்டன்கள் செய்த மற்றொரு தோல்வியுற்ற முயற்சியாகும்.

காரணம் நேற்று அந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணம் வந்ததால் கலந்து கொள்ளாவிட்டாலும் அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட எமது சிரேஷ்ட அமைச்சர்கள் அனைவரும் அவ்வாறான எதுவும் உண்மையிலேயே பிரதமரும் பேசவில்லை என என்னிடம் கூறினார்கள்.

அவ்விடத்தில் அவ்வாறான எதுவும் பேசப்படாத நிலையில் அதேபோன்று எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் சஜித் பிரேமதாசவே அபேட்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில் இவ்வாறான போலி பிரசாரங்களின் ஊடாகத் தெரிவது  ப்ரோடாபயவின் பிரசார நடவடிக்கைகள் சரிவடைந்துள்ள நிலையேயாகும்.

காரணம் எமக்கு நன்றாகத் தெரியும் இது அந்தப் பக்கத்திலிருந்து ப்ளான் செய்யப்பட்ட நிவ்ஸ் என்று. தெளிவாக நான் மீண்டும் கூறுகின்றேன், இந்நாட்டு மக்கள்,  எமது பாராளுமன்ற உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு தரப்பினர்,  76 பேரில் 52க்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு எமக்கு அபேட்சகராக சஜித் பிரேமதாசவே வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

அதே போன்று இந்நாட்டு மக்களில் நான் நினைக்கின்றேன், ஆறில் ஐந்தை நாம் பதுளையில் கண்டோம், மாத்தறையில் கண்டோம், குருநாகலில் கண்டோம். இங்கு யாழ்ப்பாணத்திற்கு வரும் போதும் நாம் கண்டோம் வீதியில் இரு பக்கத்திலும் அமைக்கப்பட்டுள்ள பதாதைகளில் அவருக்குள்ள செல்வாக்கை.  எனவே முழு நாடும் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் நேரத்தில், கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கும் நேரத்தில் இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாகக் கூறுவது உண்மையிலேயே பகிடியான விடயமாகும்.

மற்றது, ஒருபோதும் எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான ஒன்றில் தொடர்புபடவும் மாட்டார். அவர் எப்போதும் பெரும்பான்மை கருத்துக்களுக்கு தலை சாய்ப்பவர்.

“அவர் எப்போதும் பெரும்பான்மை கருத்துக்களுக்கு தலை சாய்த்துள்ளார்”

அதேபோன்று உண்மையிலேயே அதிக நாள் செல்ல முன்னர் பிரதமரின் பிரேரணையில், அதேபோன்று எமது சபாநாயகர் கரு ஜயசூரியவின் அங்கீகாரத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாச கண்டிப்பாக இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் நவம்பர் மாதத்தில், டிசம்பர் மாதத்தின் நடைபெறும் தோ்தலின் பின்னர் அடுத்த ஜனாதிபதியாக வருவதை எவராலும் தடுக்க முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது”

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்,

“ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுதானே அந்த தீர்மானத்தை எடுத்தது?”

“சரி அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர்களே செயற்குழுவில் இருக்கின்றார்கள். தற்போது மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவேதான் நாம் கூறுகின்றோம் இந்த தீர்மானமானது கோத்தாபயவுக்கு சார்பாக இருக்கும் ஒவ்வொருத்தருத்தரால் எடுக்கப்படக் கூடாது. அந்த தீர்மானத்தை நாம் செயற்குழுவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து கூடிய கூட்டத்தில் இறுதி முடிவாக எடுப்போம்”

“ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றதே?”

இல்லை! ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவு படவில்லை. பிளவும் படாது. இரண்டாகப் பிளவு பட முடியாதே. காரணம் 95 பேர் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் போது இன்னும் ஐந்து போ் முடியாது என்றால் அப்போது பிளவு படுவதானால் பிளவு படப் போவது அந்த ஐந்து பேரே தவிற 95 பேரல்ல. ஒட்டு மொத்த கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றது


Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி