“சஜித் வருகிறார்” அடுத்த மக்கள் கூட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் கொழும்பு காலிமுகத்திடலில் நடாத்துவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள்

தீர்மானித்துள்ளனர்.

“கொழும்புக்குச் சென்று ரணிலிடம் கூறுவோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்படவுள்ள பிரமாண்டமான கூட்டம் இடம்பெறும் திகதி பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என இந்த கூட்ட ஏற்பாடுகளைச் செய்யும் அமைச்சர் ஒருவர் கூறினார்.

“சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோரும், செயற்குழு அங்கத்தவர்களுள் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோரும் விடுத்த கோரிக்கையினை பிரதமர் தொடர்ந்தும் கவனத்தில் எடுக்காமல் செயற்படுவாரானால், கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை கொழும்புக்கு அழைத்து வந்து  அலரி மாளிகையினை முற்றுகையிட வேண்டிய நிலை எமக்கு ஏற்படும்” என்றும் அந்த அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கிராமங்கள், நகரங்களின் பிரதிநிதிகளது குரலை நேற்றைய தினத்தில் நாடே பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சனியன்று கொழும்பில்...!

அவர் அவ்வாறு கூறியது ஐக்கிய தேசிய கட்சியினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் எனக் கூறியேயாகும்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களான சாகல ரத்நாயக்கா, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன போன்றோர் நேற்று முன்தினம் முழுவதும் அந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தோன்றியிருக்கும் உள்ளக முரண்பாடு தொடர்பில் நெத் நிவ்ஸூக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இவ்வாறு கூறினார்.

குரல் பதிவு - 1

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி அபேட்சகராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 77 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 42 போர் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

குரல் பதிவு - 2

“இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை மதிப்பதில்லை”- மஹிந்த கவலை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தோன்றியுள்ள குழப்ப நிலை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆழ்ந்த கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது.


“இன்று ஐக்கிய தேசிய கட்சித் தலைவரை பொருட்படுத்துவதில்லை. ஐக்கிய தேசிய கட்சி இரண்டு மூன்றாக உடைந்துள்ளது” என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான்  எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றங்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் அங்கு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி