கோத்தா ஒரு தேசிய வேட்பாளராக இருந்தால் மாத்திரமே அவரிடமிருந்து எதையேனும் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்,  அவர் தாமரை மொட்டுவின்

அபேட்சகர் என்றால் எந்த வகையிலும் அந்தளவுக்கு எதிர்பார்ப்புக்களை வைக்க முடியாது என்றும் பேராசிரியர் நலின் த சில்வா சுட்டிக் காட்டியுள்ளார்.

கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்காக “மஹிந்த - பெஷில்” இருவர் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு கடும் சமூக அழுத்தங்களை ஏற்படுத்திய தேசிய சிந்தனை தலைவர் பேராசிரியர் நலின் த சில்வா “காலம்” முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“கோத்தாபய எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் அவர் தேசிய வேட்பாளராக கூட்டணியுடனேயே இருக்க வேண்டும். எனினும் இன்று அவர் தாமரை மொட்டுடனேயே பயணிக்கின்றார். அது அந்தளவு நல்ல விடயம் அல்ல” என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

“கோத்தாபவும் மற்றும் தேர்தலும்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த கருத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“கோத்தாவிடமிருந்து எதனை எதிர்பார்ப்பது என என்னிடம் சிலர் கேட்கின்றனர். அவ்வாறான பலரிடத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. எனக்கெனில் அவ்வாறில்லை. கோத்தாபய தாமரை மொட்டுவின் வேட்பாளர் என்றால் எந்த வகையில் அந்தளவுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லை.  அவர் ஒரு தேசிய வேட்பாளராக இருந்தால் மாத்திரமே அவரிடமிருந்து எதையாவது எதிர்பார்க்க முடியும். எனினும் பெரியதாக எதுவும் இல்லை.

நாடு இன்னும் இன்னும் பாதாளத்தை நோக்கிச் செல்வதைத் தடுப்பதும், சிங்கள பௌத்த ராஜ்ஜியத்தை மீண்டும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை எதிர்பார்க்க முடியும். பாதாளத்தில் வீழ்ந்து விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதைத் தான் அதிகமாக எதிர்பார்க்க வேண்டியிருக்கின்றது.

இவ்விடயங்களைப் பார்த்தவுடன் சில தாமரை மொட்டுவின் அபிமானிகள் குழப்பமடைவார்கள். சிங்கள பௌத்த ராஜ்ஜியம் தொடர்பில் நினைவு படுத்தி பௌத்தர்கள் அல்லாத மக்களின் வாக்குகளை எவ்வாறு வெற்றி கொள்வது என அவர்கள் கேட்பதற்கு இடமுண்டு. அவர்கள் கத்தோலிக்கர்களிடத்தில் பேசினால் அந்தப் பிரச்சினைக்கான பதிலை தேடிக் கொள்ள முடியும். இன்று அனேக கத்தோலிக்கர்களுக்கு தெரியும் தமது சமய மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு சிங்கள பௌத்த கொடியின் நிழலில் எவ்வாறு இருப்பது என்று.  

எனினும் எனக்குத் தெரிந்த வகையில் பௌத்தரல்லாத குடும்பத்தில் பிறந்த டிலான் பெரேராவோ, மாக்ஸ்வாதத்தினா் தலையை பழுதாக்கிக் கொண்ட எஸ்.பி.திசாநாயக்காவோ சிங்கள பௌத்த ராஜ்ஜிய கதைக்கு இணங்கப் போவதில்லை. இன்று அவர்கள் இருப்பதும் தாமரை மொட்டு கட்சியிலாகும். காடு மாறினாலும் புள்ளி மாறப் போவதில்லை!

எஸ்.பி.திசாநாயக்கா எனில் ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து தாமரை மொட்டுவுடன் இணைவதற்காக ஒரு வேலையைச் செய்தார். அதற்காக அவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும்.  அது நன்றி தெரிவிக்கும் என்ற அர்த்தத்திலாகும். அவர் இனவாதியல்ல. அவர் இன்னமும் ஒரு கொம்பியுனிஸ்ட் வாதியாகும்.

 அவர் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைந்து கொண்டது கொம்பியுனிஸ்ட் மற்றும் சமசமாஜ கட்சிகள் காலாவதியாகிப் போன கட்சிகள் என புரிந்து கொடதனாலாகும்.

திஸ்ஸ வித்தாரணவும், டிவ் குணசேகரவும் இன்னமும் இதைனைப் புரிந்து கொள்ளவில்லை. என்றாலும் அவர்களுக்கும் எஸ்.பி.திசாநாயக்கா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கிடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை.

டிலான் பெரேரா விஜய குமாரதுங்கவின் மக்கள் கட்சியில் இருந்தார். இப்போது எவ்வாறிருந்தாலும் அப்போதைய மக்கள் கட்சி சிங்கள விரோத கட்சியாகும். டிலான் பெரேராக்கள், எஸ்.பி.திசாநாயக்காக்கள் போன்றோரைப் பற்றி கூற இருப்பது காட்டை மாற்றினாலும்  புள்ளிகள் மாறாது என்ற கதையையேயாகும்.

இன்று அனேகமானோர் கேட்கும் கேள்வி,  தாமரை மொட்டு இனவாதிகளான, மதவாதிகளான, தீவிரவாதிகளைப் பாதுகாப்பவர்களான சிறுபான்மை கட்சிகளோடு எப்போது இணையப் போகின்றது என்றாகும். அதிகமாக இதைப் பற்றிக் கேட்கத் தொடங்கியது மஹிந்த தாமரை மொட்டு கட்சியினரிடத்தில் ரிசாத் பதியுத்தீன்களை விமர்சிக்க வேண்டாம் எனக் கூறிய நாளிலிருந்தாகும்.

பெண்களடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் ஆண்கள் முடிந்து விட்டார்கள்  என மஹிந்த தாமரை மொட்டு கட்சியின் பெண்களிடத்தில் கூறினார். நான் கூற வேண்டியிருப்பது சிங்களவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் கட்சிகளும் முடிந்து விட்டது என்றேயாகும்.

யாரையாவது எப்படியாவது திருப்தி படுத்தி வாக்குகளைப் பெறுவது புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல. எனினும் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தி வாக்குகளைப் பெறுவது என்பது இலகுவான ஒன்றல்ல.

அந்த கூட்டணியை அமைப்பதற்கு இந்தளவு தாமதம் ஏன்? கோத்தாபய எந்தக் கட்சியில் இறங்கினாலும் அவர் தேசிய அபேட்சகராக கூட்டணியுடனேயே இருக்க வேண்டும். எனினும் இன்று அவர் தாமரை மொட்டுடனேயே பயணிக்கின்றார். அது அந்தளவுக்கு நல்ல விடயமல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி