ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவையும், பிரதமர் வேட்பாளராக

சஜித் பிரேமதாசவையும் நிறுத்த வேண்டும் என இன்று (06) இடம்பெற்ற அக்கட்சியின் அனேக சிரேஷ்டமானவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றாக பொய்யானது என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  தெரிவித்தனர். “ரணில் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரதமர் வேட்பாளர்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் theleader.lk குறித்த சிரேஷ்ட அமைச்சரிடம் கேட்ட போதே அவா் இவ்வாறு கூறினார்.

“உண்மையிலேயே அக்கூட்டத்தில் இடம்பெற்றது குறித்த செய்தியில் கூறப்பட்ட விடயத்திற்கு முற்றாக மாற்றமான சம்பவமாகும். தன்னை விட இரண்டு மடங்கு சஜித் பிரேமதாச பிரபலமானவர் என்பதை பிரதமரால் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது”  எனத் தெரிவித்த அந்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

“நாம் கட்சித் தலைவரிடத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறுவது கோபத்தில் அல்ல என அமைச்சர் மலிக் சமரவிக்ரம இங்கு சுட்டிக் காட்டினார். பிரதமரை களமிறக்கினால் எம்மால் கோத்தாவுடன் போட்டியிடுவதற்காக அருகிலும் செல்ல முடியாது என்றும், சஜித் வந்தால் கூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம அங்கு மேலும் கூறினார்”

20 வருடங்களுக்கு பின்னர் ஐ.தே.கட்சிக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டால் 20 வருடங்களாக எமது கட்சியால் பெற்றுக் கொள்ள முடியாது போயிருந்த ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகும் என இங்கு அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்த கருத்தை அங்கீகரித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்ஜித் மத்துமபண்டார போன்ற சிரேஷ்ட அமைச்சர்களும் கூட இங்கு கருத்து தெரிவித்தனர்.

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பிற்கு அமைய சஜித் பிரேமதாச தன்னை விட முன்னணியில் இருப்பதை பிரதமரால் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

கட்சியின் சிரேஷ்டமானவர்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும், எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஞாயிறு (08) சஜித் பிரேமதாசவை தனிமையில் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதமர் தெளிவாகக் கூறினார்.

இளைய உறுப்பினர் இருவர் குழப்பம்

எனினும் பிரதமரின் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகா மற்றும் தயா கமகே ஆகிய சிரேஷ்டத்தில் குறைந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் குழப்பமான நிலையினை தோற்றுவிப்பதற்கு முயன்று அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கான தகுதிகள் இருப்பதாகக் கூறுவதற்கு இந்த கூட்டத்தை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எவ்வாறாயினும், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் லசந்த குணவர்தன என்பவரால் இக்கூட்டம் நிறைவடைந்த உடனேயே “ரணில் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரதமர் வேட்பாளர்”  என்ற செய்தியை சஜித் எதிர்ப்பு  சில சமூக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

பாராளுமன்றத்திலும், மற்றும் செயற்குழுவிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர்  ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். எனவே, முடிந்தால் ரணிலை போட்டு பாருங்கள் என நாம் “ரவி, தயா, பொனி” போன்றோருக்கு சவால் விடுகின்றோம்” என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி