ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்களால் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுவிட்டார் என்பது போகுமிடங்களில்

எல்லாம்  தெளிவாகுவதாகவும், அண்மையில் பதுளை மற்றும் மாத்தரையிலும், எதிர்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவம் செய்யும் குருணாகலில் நேற்று இடம்பெற்ற “சஜித் நாட்டுக்கே வருவார்” கூட்டங்களில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆர்வத்திலிருந்து இவ்விடயம் உறுதியாவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் “எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சிக்காக இன்று யாழ்ப்பாண்திற்கு வருகை தந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வருகை தந்த அமைச்சர் சமரவீர, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் பல ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததோடு,  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடா்பில் பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.


இதன் போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சமரவீர, தற்போது பேசி இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதுவும் இல்லை. நாட்டு மக்கள் சஜித்தைத் தெரிவு செய்துவிட்டார்கள். இனி மீதமிருப்பது அதனை உத்தியோகபூர்வமான அறிவிப்பது மாத்திரமேயாகும். பிரதமர் இதனை அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிப்பார். அது தொடர்பில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொருத்தரின் “ப்ளேன் நிவ்ஸ்” களுக்கு ஏமாந்து விட வேண்டாம்” என்றும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி