1200 x 80 DMirror

 
 

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலையில் ஏற்படுத்தப்பட்டுவரும் பாரிய அதிகரிப்பு நாட்டு மக்களின் கழுத்தை நெருக்கும் நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள் விலையுடன், நாட்டின் போக்குவரத்துக் கட்டணம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி நாட்டையும் மக்களையும் மீள முடியாத கடன் சுமையில் தள்ளியுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க, மத்திய வங்கி வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு ஒரே தினத்தில் டொலரின் பெறுமதியைக் கடந்த 10 ஆம் திகதி  50 ரூபாவினால் உயர்த்தியது.இந்த நிலைமையை சமாளிக்க இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவேண்டி நிர்ப்பந்தம் உருவானது.

இதன்படி,  பிரதான எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை அதிகரித்தன. இது நாட்டில், அத்தியாவசிய உணவு பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் பேக்கரி உணவுகளின் விலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண மக்களின் காலை மற்றும் இரவு உணவான உட்கொள்ளப்படும் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, வெவ்வேறு வகை பாண்களின் புதிய விலைகள் 110 ரூபா முதல் 130 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்படுகின்றது.இதன் தாக்கம் நாட்டு மக்களின் உணவு வேளையை ஒரு நேரமாக குறைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, அரசாங்கம் தமக்கான மானியங்களை வழங்காவிடில் பஸ் கட்டணங்களை 30% ஆல் உயர்த்த தீர்மானித்துள்ளதாகத் தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.இதே நேரம் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை தற்போதைய 17ரூபாவிலிருந்து 30 ரூபா வரை அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளன.

டீசலின் விலையை 55 ரூபாவினால் உயர்த்துவதற்கு அரசாங்கத்தின் முடிவினால் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகக் குறித்த சங்கம் தெரிவிக்கின்றது.பாணின் விலை முதல் பால் மா விலை வரை அதிகரித்துள்ள போதும் நாட்டு மக்களின் ஊதியங்களில் எந்த அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

அரசாங்கம் மேலும் மேலும் மக்களின் மீது இவ்வாறு சுமைகளை ஏற்றுவது, மக்களின் கோபத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.இதனிடையே நாட்டில் பதிவாகிவரும் வருமையில் வாடும் மக்களின் தற்கொலைகள் நாட்டின் நிலைமையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. இருண்ட பாதையில் பயணிக்கும் நாட்டின் பொருளாதாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர, புதிய சிந்தனைகளும் திட்டங்களும் கொண்ட ஒரு அரசினால் மட்டுமே இயலும். எனினும் அவ்வாறான ஒரு அரசு இலங்கையில் நிறுவப்படுசதற்கான சாத்தியகூறுகள் கேள்விக்குறியதே!

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி