1200 x 80 DMirror

 
 

இலங்கையில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை ஆணைக்குழுக்கள் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காத காரணத்தினால், பெண்களே இணைந்து மகளிர் ஆணைக்குழு ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.

அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் வரையறைக்கு உட்பட்டதோடு அல்லாமல் ஆட்சி மாற்றங்களின் போது  சுயாதீனமாகச் செயற்படவில்லை எனவும் இந்த அமைப்பை உருவாக்க காரணமான பெண்கள் குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு பெண்கள் தங்கள் உண்மையான குறைகளை வெளிப்படுத்தச் சுதந்திரமான சூழல் தேவை என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் பெண்களுக்கான விதிகள் மற்றும் விதிமுறைகளை எழுத்துப்பூர்வமாக மட்டும் அன்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். 

எனவே, இலங்கையின் சனத்தொகையில் 52% வீதமான பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஆரம்பிப்பதாகச் சாவித்திரியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பத்மா புஷ்பகாந்தி தெரிவித்தார்.மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மகளிர் ஆணைக்குழு’ என்ற அமைப்பைத் துவக்கி வைத்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

Padma Pushpakanthi

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி