1200 x 80 DMirror

 
 

கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“நல்லாட்சியின் போது மக்களுக்கு செய்தது என்ன” என கேள்வி எழுப்பிய மேற்படி அணியினர்,  ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நேற்றுமுன்தினம் அரச தலைவர் இல்லத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

இப் போராட்டத்தில், எரிபொருள் நெருக்கடியின் காரணமாக தொழிலுக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டொலர் நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரியே ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. சிறந்தவொரு அரசியல் தலைவர் என்பவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவே இருக்க வேண்டும். மாறாக விமர்சனங்களுக்கு அஞ்சி கோபம் கொள்பவர்களும், ஆயுதம் ஏந்துபவர்களும் சிறந்த தலைவர்களாக இருக்க முடியாது.

புலிகளுடன் நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படும் , இராணுவ வீரரான ஜனாதிபதி பெண்களான எம்மை கண்டு அஞ்சுவது ஏன்? இவ்வாறு பெண்களுக்கு அஞ்சி ஓடி ஒழிந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். ராஜபக்ஷர்களின் அச்சுறுத்தல்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை பெண்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்துள்ளோம்.

ஜனாதிபதியின் வீட்டை மாத்திரமின்றி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்களின் வீட்டையும் சுற்றிவளைக்குமாறு வலியுறுத்துகின்றோம். இது ராஜபக்ஷக்களின் நாடு அல்ல. அவர்கள் வெறும் வர்த்தகர்கள் மாத்திரமே. அவர்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவிற்கு தப்பிச் சென்று விடுவர். ஆனால் நாம் எங்கு செல்வது? இது எமது நாடு. ராஜபக்ஷர்களிடமிருந்து இந்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதன் எதிரொலியாகவே இன்றைய தினம் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தமது அதரவாளர்களுடன் கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் வந்து போராட்டம் நடத்தியதுடன் முட்டைகளை வீசியும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

22 6225ab9fd837d 1

22 6225ab9fbd459 1

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி