1200 x 80 DMirror

 
 

2016 ஆம் ஆண்டு அரசுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய பிணைமுறி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு  நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குற்றச்சாட்டிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக 36 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயம்  பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என தீர்மானித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் பிரதிவாதிகளை விடுதலை செய்ததுடன், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தொடர முடியும் என நீதிபதி மொஹமட் இஷாதீன் தீர்ப்பளித்தார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட பத்திர ஏலத்தில் 36 பில்லியனுக்கும் அதிகமான திறைசேரி பத்திரங்கள் தொடர்பில் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், உர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் பணிப்பாளர்களான ஜெப்ரி அலோசியஸ், அர்சுன் அதுலியாஸ் பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக் குறியீடு உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசு வழக்கறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம, வழக்கை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், ரவி கருணாநாயக்க தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, இந்தக் கோரிக்கையை ஆட்சேபித்ததுடன், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டைப் பேண முடியாது என நீதிமன்றத் தீர்ப்பினால் முழு குற்றப்பத்திரிகையையும் பேண முடியாது எனத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய முடியாதுள்ளதாகவும், அதன் பிரகாரம் அதனை மீளப்பெறுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், வழக்கு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் வரை வழக்கை ஒத்திவைப்பது நெறிமுறையாகாது என தலைமை நீதிபதி தமித் தோட்டவத்த தெரிவித்ததுடன், எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி