Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஈரானின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி!

T

The Leader Desk

மார்ச் 25, 2026 • 4:09 AM

ஈரானின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டு இராணுவ நடவடிக்கை இன்றுடன் (25) 26 ஆவது நாளை எட்டியுள்ளது.
  • கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான இந்த போர் நடவடிக்கையில், ஈரானின் அணுசக்தி உட்கட்டமைப்புகளைச் சிதைப்பது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது.
  • இதேவேளை, உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் (Crude Oil) விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
  • சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, தற்போதைய விலை விபரங்கள் வருமாறு: WTI மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 88.27 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
எழுத்து அளவு:

கூட்டு இராணுவ நடவடிக்கை இன்றுடன் (25) 26 ஆவது நாளை எட்டியுள்ளது.

  • லெபனான் மீதான தாக்குதல்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள சிடோன் (Sidon) நகரில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

  • அணுமின் நிலையம் இலக்கு: ஈரானின் புஷெஹ்ர் (Bushehr) அணுமின் நிலைய வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான இந்த போர் நடவடிக்கையில், ஈரானின் அணுசக்தி உட்கட்டமைப்புகளைச் சிதைப்பது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது.

புஷெஹ்ர் அணுமின் நிலையம் ஈரானின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

மசகு எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி!

இதேவேளை, உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் (Crude Oil) விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, தற்போதைய விலை விபரங்கள் வருமாறு:

  • WTI மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 88.27 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 4.42 சதவீத வீழ்ச்சியாகும்.

  • பிரெண்ட் (Brent) வகை: ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 98.84 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும்.

  • மர்பன் (Murban) வகை: இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மர்பன் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 119.88 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 11.31 சதவீத பாரிய வீழ்ச்சியாகும்.

விலை வீழ்ச்சிக்கான பின்னணி:

மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, சந்தையில் நிலவிய எரிசக்தி தட்டுப்பாடு குறித்த அச்சம் குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...