மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முக்கிய விடயங்கள்:
-
ஹார்முஸ் நீரிணை: ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஒருபோதும் மூடவில்லை என்பதை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
-
இருதரப்பு உறவு: இலங்கை நெருக்கடிக்குள்ளாவதை ஈரான் விரும்பவில்லை என்றும், ஈரான் இலங்கையை மிகவும் மரியாதைக்குரிய நாடாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
நன்றி தெரிவிப்பு: அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் மூழ்கிய ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமையை தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
-
விஜயத்தின் பின்னணி: குறித்த போர்க்கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்களும் இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிேலேயே இலங்கைக்கு வந்துகொண்டிருந்தன என அவர் விளக்கமளித்தார்.
ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு:
ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் அல்லது ஏனைய வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசு தயாராக உள்ளது.
-
பாதுகாப்பு ஏற்பாடுகள்: வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பதற்காக விரிவான உட்கட்டமைப்புகள் ஈரானில் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
-
பயண வசதி: "அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப விரும்பினால், துருக்கி போன்ற அண்டை நாடுகள் ஊடாக அவர்களது பயண வசதிகளைச் செய்துகொடுக்க முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


