Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

T

The Leader Desk

மார்ச் 11, 2026 • 4:46 AM

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று காலை நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
  • அதேவேளை, அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.35 டொலர்களாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதற்தடவையாக 100 டொலர் எல்லையைத் தாண்டியதுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை உயர்ந்திருந்தது.
  • இவ்வாறானதொரு பின்னணியில், "யுத்தம் மிக விரைவில் முடிவுக்கு வரும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று விடுத்திருந்த கருத்தையடுத்து, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 90 டொலர்கள் வரை குறைவடைந்தது.
எழுத்து அளவு:

இன்று காலை நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.35 டொலர்களாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக சடுதியாக அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், தற்போது மீண்டும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதற்தடவையாக 100 டொலர் எல்லையைத் தாண்டியதுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை உயர்ந்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், "யுத்தம் மிக விரைவில் முடிவுக்கு வரும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று விடுத்திருந்த கருத்தையடுத்து, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 90 டொலர்கள் வரை குறைவடைந்தது. இது 8 சதவீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை, ஈரானிய போர்ச் சூழல் காரணமாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் தளம்பல் நிலையைத் தொடர்ந்து, இன்று காலை ஆசிய சந்தை வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமாகிய போது மசகு எண்ணெய் விலை ஓரளவிற்கு நிலையான மட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...