Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை

T

The Leader Desk

மே 29, 2023 • 11:35 AM

மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
  • மாடுகளின் தோலுடன் தொடர்புடைய வைரஸ் நோயான Lumpy Skin diseases தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 கால்நடை அதிகாரி பிரிவுகளில் 34 க்கும் பரவியுள்ளது.
  • நிலைமையை கருத்திற் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வடமேற்கு மாகாணத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாடுகளின் தோலுடன் தொடர்புடைய வைரஸ் நோயான Lumpy Skin diseases தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 கால்நடை அதிகாரி பிரிவுகளில் 34 க்கும் பரவியுள்ளது.

நிலைமையை கருத்திற் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கும் பின்னர் வடமத்திய மாகாணத்தின் ஊடாக வடமேற்கு மாகாணத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாடுகளுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டதன் பின்னர் பால் உற்பத்தி குறைவடையும் எனவும் இதனூடாகவடமேற்கு மாகாணத்தில் பால் உற்பத்திக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.

இந்நோய் தொற்று காரணமாக மாடுகளின் இறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், இந்நோயை உரிய முறையில் நிர்வகித்து மாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினால் மூன்று வாரங்களுக்குள் மாடுகளை குணப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படும் என பெரேரா தெரிவித்தார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...