Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட வசதி

T

The Leader Desk

மே 28, 2023 • 3:54 AM

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட வசதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் "சிசு சரிய" பேருந்து சேவை பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும்.
  • இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
  • இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
  • இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் "சிசு சரிய" பேருந்து சேவை பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும்.

எவ்வாறாயினும், சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பேருந்து சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் இன்று (28) விசேட டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள போதிலும், உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டை நிறைவுசெய்யும் என நம்புவதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...