Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ

T

The Leader Desk

மே 27, 2023 • 5:40 PM

மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏனைய மதங்கள் தொடர்பில் கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 21 ஆம் திகதி அவர் தனது அறிக்கையினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கோருவதாக சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்று (26) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
எழுத்து அளவு:
கேட்டுள்ளார்.

ஏனைய மதங்கள் தொடர்பில் கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 21 ஆம் திகதி அவர் தனது அறிக்கையினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கோருவதாக சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்று (26) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தனது கருத்து குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...