Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை!

T

The Leader Desk

மே 26, 2023 • 3:43 PM

ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
  • சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
  • இதன்போது, ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையும் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
எழுத்து அளவு:
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அனைவரும் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்போது, ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையும் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், எந்த காரணத்திற்காகவோ முறைப்பாட்டாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...