Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது!

T

The Leader Desk

மே 26, 2023 • 3:39 PM

பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.
  • குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
  • இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:


அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் தொடங்க இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தென்கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...