Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சுங்க சட்டத்தை மீறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்களையும் பாராளுமன்றத்தையும் அவமதித்துள்ளார்

T

The Leader Desk

மே 25, 2023 • 10:22 AM

சுங்க சட்டத்தை மீறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்களையும் பாராளுமன்றத்தையும் அவமதித்துள்ளார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் மிகுந்த வருத்தம் அடையும் அதே வேலை, ஒரு நாடு என்ற வகையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகவும் நாம் இதை கருதுகின்றோம்.
  • இதனூடாக நாட்டின் அந்நியச் செலாவணி சட்டங்களும் மீறப்பட்டு இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • இந்த செயலின் காரணமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுப்படுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஏழு கோடியே 50 லட்சம் பெறுமதிவாய்ந்த மூன்றரை கிலோ தங்க பிஸ்கட்கள், ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டத்திற்கு புறம்பான விதத்தில் நாட்டுக்கு கொண்டு வந்தபோது கைதான சம்பவம் மிகவும் பாரதூரமான விடயமாகவே எமது அமைப்பு கருதுகின்றது. இது தொடர்பில் மிகுந்த வருத்தம் அடையும் அதே வேலை, ஒரு நாடு என்ற வகையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகவும் நாம் இதை கருதுகின்றோம்.

"கௌரவ உறுப்பினர்" என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தை பயன்படுத்தி செய்திருக்கும் இந்த செயலானது இந்த நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்து வரும் ஊழல் செயல்களின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம். இந்த செயலின் காரணமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுப்படுத்தியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்ணியமிக்க உறுப்பினர்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை இவர்கள் போன்ற நபர்களின் செயல்களினால் கண்ணியம்மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மேலும் இந்த செயலானது வெறுமென சுங்க சட்டத்தை மீறிய செயலாக மட்டும் கருதக்கூடியது அல்ல என்பதும் புலனாகின்றது. இதனூடாக நாட்டின் அந்நியச் செலாவணி சட்டங்களும் மீறப்பட்டு இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இடம்பெற்றிருக்குமாயின் அது பாரிய குற்றமாகும். ஆகையால் நாட்டின் பொறுப்புடைய தரப்புகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அதே வேலை, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி தராதரங்கள் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

கரு ஜயசூரிய,
தலைவர்,
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...