Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவும் கடத்தல் வீடியோக்கள்! - பொலிஸார் விளக்கம்!

T

The Leader Desk

மே 23, 2023 • 5:36 PM

சமூக ஊடகங்களில் பரவும் கடத்தல் வீடியோக்கள்! - பொலிஸார் விளக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
  • நாட்டில் எங்கும் இவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது காணாமல் போதல் இடம்பெறவில்லை என இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
  • மேலும் இவர்தான் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
எழுத்து அளவு:

என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் எங்கும் இவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது காணாமல் போதல் இடம்பெறவில்லை என இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“குறிப்பாக இத்தினங்களில் சமூக வலைத்தளங்களில் நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக பரவி வருகின்றது. மேலும், நாட்டின் சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மன்னார், தலை மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி என பல்வேறு முறைப்பாடுகள் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கிடைத்துள்ளன. ஆனால் இது தொடர்பான விசாரணைகளில் இதுவரை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, மேலும் விசாரணையின் போது சில சந்தேகத்திற்குரிய விடயங்கள் தெரியவந்துள்ளன.. உண்மையில் வேன்களில் வந்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து எங்கும் பதிவாகவில்லை. ஆனால் சில இடங்களில் பதற்றமான சம்பவங்கள் நடந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் வதந்திகள் பரவின. மேலும் இவர்தான் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட நபர் குறித்து இலங்கை பொலிஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு குறிப்பிட்ட ஒருவரை அடையாளம் காண்பதற்கு ஊடகங்களின் உதவியை நாங்கள் கோரவில்லை. மேலும், பல்வேறு குழந்தைகள் கடத்தப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவை தொடர்பில் ஆய்வு செய்தபோது, ​​இவை பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வேறு நாடுகளில் இடம்பெறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் போலியானது என தெரியவந்துள்ளது. இவ்வாறான குழந்தைகள் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ நாட்டில் எங்கும் பதிவாகவில்லை. அது போலியான தகவல். மேலும் வெளிநாடுகளில் உள்ள வீடியோக்கள்தான் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சமூக ஊடகங்களில் பரவும் கடத்தல் வீடியோக்கள்! - பொலிஸார் விளக்கம்! | Tamil Leader | We Lead the Nation