Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு நாளை முதல் வவுச்சர்!

T

The Leader Desk

மே 21, 2023 • 5:00 PM

நெல் விவசாயிகளுக்கு நாளை முதல் வவுச்சர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.
  • விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த வவுச்சர்கள் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

(22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன உரங்களை கொள்வனவு செய்வதற்கு மானிய வவுச்சர்கள் வடிவில் நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த வவுச்சர்கள் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க, இரண்டு அரச உர நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் இரசாயன அல்லது சேதன உரங்களை அனைத்து உழவர் சேவை மையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் கொள்முதல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...