அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றிரவு காயமடைந்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், காயமடைந்த நபரின் மனைவியையும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய ரைபல் ரக துப்பாக்கி. சந்தேகநபர்கள் குறித்த இடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடவத்தையில் துப்பாக்கிச் சூடு
T
The Leader Desk
மே 19, 2023 • 4:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
- சந்தேகநபர்கள் பயன்படுத்திய ரைபல் ரக துப்பாக்கி.
- கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

