Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பாஸ்போர்ட் பெற உள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

T

The Leader Desk

மே 18, 2023 • 12:34 PM

பாஸ்போர்ட் பெற உள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
  • கடும் நெரிசல் காரணமாக நேற்று (17) அலுவலகத்தின் ஒரு நாள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தரகர்கள் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் சில நாட்களாக கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று (17) அலுவலகத்தின் ஒரு நாள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு சேவைகள் முன்கூட்டியே முன்பதிவு முறையில் இடம்பெறுகின்றன.

முந்தைய திகதியில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்து சேவைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தரகர்கள் முறையான முறைக்கு புறம்பாக சட்டவிரோதமான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க முற்பட்டதால், முன்பதிவு செய்யும் பணியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று ஒரு நாள் சேவையும் இடம்பெறாததால், சேவையை பெற வந்த பலர் பல அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.

சிலர் குடிவரவு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக இரவைக் கழிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...