Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

களுத்துறை மாணவி மரணம் - சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

T

The Leader Desk

மே 15, 2023 • 10:23 AM

களுத்துறை மாணவி மரணம் - சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
  • சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது உயிரிழந்த சிறுமியின் தாயார் உட்பட சுமார் 100 பேர் நீதிமன்றத்திற்கு முன்பாக காலி வீதியில் வரிசையில் நின்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இறந்த சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும், பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும், தரங்குறைந்த கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 30 நிமிடங்கள் இவ்வாறு மௌனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் தம்பதியினர், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேக நபரின் சாரதியாக இருந்தவர் ஆகியோர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது உயிரிழந்த சிறுமியின் தாயார் உட்பட சுமார் 100 பேர் நீதிமன்றத்திற்கு முன்பாக காலி வீதியில் வரிசையில் நின்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்த சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும், பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும், தரங்குறைந்த கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 30 நிமிடங்கள் இவ்வாறு மௌனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக களுத்துறை நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை காணப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

களுத்துறை மாணவி மரணம் - சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்! | Tamil Leader | We Lead the Nation