ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
T
The Leader Desk
மே 13, 2023 • 10:34 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
- வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

