Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

களுத்துறை ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டதா?

T

The Leader Desk

மே 12, 2023 • 5:27 AM

களுத்துறை ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
  • இது தொடர்பான உத்தரவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் நேற்று (11) நகர அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தின் தலைவர்களுக்கு வழங்கினார்.
  • பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 மாடி ஹோட்டல் களுத்துறை நகரின் மையப்பகுதியில் மிகவும் குறுகிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • அத்தகைய கட்டிடத்தை கட்டும் போது அனுமதி மற்றும் ஆலோசனைக்கு பல நிறுவனங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
எழுத்து அளவு:

நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் நேற்று (11) நகர அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தின் தலைவர்களுக்கு வழங்கினார்.

இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என நம்புவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார்.

உரிய தரமற்ற மற்றும் அனுமதியின்றி உரிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டால் கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 மாடி ஹோட்டல் களுத்துறை நகரின் மையப்பகுதியில் மிகவும் குறுகிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கட்டிடத்தை கட்டும் போது அனுமதி மற்றும் ஆலோசனைக்கு பல நிறுவனங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரத்தை அறிவியல் பூர்வமாக உறுதி செய்வதும் அவசியம்.

கட்டடம் கட்டுவதற்கு முன், உள்ளூராட்சி நிறுவகத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு அந்தந்த உள்ளூராட்சிகளின் சிறப்பு சட்டங்கள் உள்ளன. அதன்படி, காணி மற்றும் வீடு அல்லது கட்டிடத்தின் திட்டத்தை சமர்ப்பித்த பிறகு, கட்டுமானம் தொடர்பான அடிப்படைத் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சியிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

களுத்துறை ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டதா? | Tamil Leader | We Lead the Nation