Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல்

T

The Leader Desk

மே 12, 2023 • 5:25 AM

ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறிப்பிட்டு 2023/05/10 (புதன்கிழமை) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை (SC SD 19/2023) தாக்கல் செய்துள்ளது.
  • TISL நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவின் பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட 37 சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
  • இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
  • இந்த வழக்கானது இன்று (12) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
எழுத்து அளவு:

குறிப்பிட்டு 2023/05/10 (புதன்கிழமை) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை (SC SD 19/2023) தாக்கல் செய்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு மசோதாவினை TISL நிறுவனம் வரவேற்கும் அதேவேளை, இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தி இவை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அதனூடாக இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TISL நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவின் பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட 37 சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள்/விதிகள் முறைகேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் (whistleblowing), தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களையும் பாதிக்கலாம் என்றும் TISL நிறுவனம் குறித்த மனுவினூடாக குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். சட்டத்தரணி நிலுகா திஸ்ஸாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான புலஸ்தி ஹேவாமான்ன, கித்மி விஜேநாராயண, பாதிலா பய்ரூஸ், பியூமி மதுஷானி, ஹரினி ஜயவர்தன, லசந்திக்க ஹெட்டியாராச்சி மற்றும் சங்கிதா குணரத்ன ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கானது இன்று (12) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...