Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்

T

The Leader Desk

மே 12, 2023 • 5:23 AM

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
  • குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
  • இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:

இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) மதியமளவில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ் வீதியில் பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • மன்னார் நிருபர் லெம்பட்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...