Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

T

The Leader Desk

மே 9, 2023 • 10:50 AM

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுமக்கள் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பெரியநீலாவணை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  • அத்துடன் இவ்வருடம் மாத்திரம் பெரிய நீலாவணை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்து அளவு:

பொதுமக்கள் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு மற்றும் சிவப்பு கலவை கொண்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இனந்தெரியாத இரு சந்தேக நபர்களினால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (08) பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

வீட்டு உரிமையாளர் தனிப்பட்ட வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த சமயம், இரண்டு சந்தேக நபர்கள் குறித்த வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை சிறு தூரம் உருட்டி சென்ற பின்னர் தலைக்கவசம் இன்றி குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கி பயணிப்பதை அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பெரியநீலாவணை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் களவாடி செல்லப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பிலோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலோ ஏதாவது தகவல்களை அறிந்திருந்தால் 071-8594528, 067-2050674 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பெரிய நீலாவணை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வருடம் மாத்திரம் பெரிய நீலாவணை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • அம்பாறை நிருபர் ஷிஹான்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...