தீர்மானத்தை எடுப்பதில் தொடர்பில் தெரிவுக்குழுவை ஒத்திவைத்ததாலும், தெரிவுக்குழுவை நடத்தாது விட்டமையினாலும் சட்டவிரோத தலைவர்கள் நியமிக்கப்பட்டனர் எனவும், இது அரசியலமைப்பிற்கு முரணான நிலையியற் கட்டளைகளை மீறும் செயற்பாடாகும் எனவும், அத்தகைய தற்காலிக தலைவர் மூலம் பல்வேறு ஏற்பாடுகளை அங்கீகரிப்பது நெறிமுறை சார்ந்ததோ அல்லது அரசியலமைப்பு சார்ந்ததோ அல்லவெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வங்குரோத்தான நாட்டின் நிதி விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதுதான் நாட்டில் பிரதான விடயமொன்றாலும், இங்கு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு எதிர்க்கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் எனவும், நிதிக்குழுத் தலைவர் பதவியை வழங்காமல் பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சுக்களை பெற எதிர்க்கட்சியில் எவரும் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வா அவர்களின் பெயர் எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்டிருக்கும் போது, எக்காரணத்திற்காக அந்நியமனத்தை மேற்கொள்ளாதிருப்பதாக நாட்டுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் முறையாக நியமிக்கப்பட்ட தலைவர் ஒரைவர் இல்லாத நிலையில், தற்காலிக தலைவர் மூலம் எவ்வாறு சட்ட விதிமுறைகளை நிறைவேற்ற முடியும்? என்ற ஒரு பிரச்சினை நிலவுவதாகவும், ஹர்ஷ டி சில்வா சரியான நிலைப்பாடுளை மேற்கொள்வதால் சில அரசியல்வாதிகள் பொறாமை கொள்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சி
T
The Leader Desk
மே 9, 2023 • 10:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலும் முறையாக நியமிக்கப்பட்ட தலைவர் ஒரைவர் இல்லாத நிலையில், தற்காலிக தலைவர் மூலம் எவ்வாறு சட்ட விதிமுறைகளை நிறைவேற்ற முடியும்?
- என்ற ஒரு பிரச்சினை நிலவுவதாகவும், ஹர்ஷ டி சில்வா சரியான நிலைப்பாடுளை மேற்கொள்வதால் சில அரசியல்வாதிகள் பொறாமை கொள்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

