Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது!

T

The Leader Desk

மே 6, 2023 • 4:49 AM

உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
  • இதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சர்வதேச அவசர நிலையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவித்தது.
  • தடுப்பூசி முழு வீச்சில் போட தொடங்கிய பிறகே கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கியது.
எழுத்து அளவு:

நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவி உலகம் முழுவதும் வியாபித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மிகக் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா முதலில் விதித்தது.

இதைப் பின்பற்றி பிற நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று பல லட்ச கணக்கான மக்களை பாதித்து பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சர்வதேச அவசர நிலையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவித்தது.

கொரோனா பெருந்தொற்று அதன் பிறகு கிட்டதட்ட பல அலைகளாக வந்து தாக்கியது. தடுப்பூசி முழு வீச்சில் போட தொடங்கிய பிறகே கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், "கொரோனா உலகை மாற்றி விட்டது. நம்மையும் மாற்றிவிட்டது. கொரோனா பெருந்தொற்ற்றின் சர்வதேச சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறோம்.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பு என்னவென்றால், இனியும் மக்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பது தான்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது! | Tamil Leader | We Lead the Nation