Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் பௌத்தர்களாவர்

T

The Leader Desk

மே 5, 2023 • 8:16 AM

மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் பௌத்தர்களாவர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த புத்தர், “யோ தம்மன் பஸ்ஸதி,ஸோ மன் பஸ்ஸதி யோ மன் பஸ்ஸதி ஸோ தம்மன் பஸ்ஸதி ”.
  • கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது.
எழுத்து அளவு:



இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகில் நிலைநாட்டப்பட்ட தோற்கடிக்க முடியாத தத்துவத்தை உலகுக்கு அருளியவர். பிரபஞ்சத்தில் உள்ள பூரண உண்மையைக் கண்டு,புத்தபிரான் உபதேசித்த ஸ்ரீ சதர்மம் நிரந்தரமானது என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறது.

பௌத்த சகாப்தம் எப்பொழுதும் பௌதிக வாழ்க்கையை போஷித்து,அதன் அடிப்படையில் ஆழ்நிலை வாழ்க்கையை வளர்க்க நடைமுறைச் செயல்களின் ஒழுங்கைக் காட்டியுள்ளது.மேலும் அந்தக் கண்ணோட்டத்தில்,பௌத்தம் மிகவும் அடிப்படை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையாகும்.

தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த புத்தர்,

“யோ தம்மன் பஸ்ஸதி,ஸோ மன் பஸ்ஸதி

யோ மன் பஸ்ஸதி ஸோ தம்மன் பஸ்ஸதி ”.

எவன் தர்மத்தைப் பார்க்கிறானோ அவன் என்னைப் பார்க்கிறான். எவன் என்னைப் பார்க்கிறானோ அவன் தர்மத்தை பார்க்கிறான்.

புத்தபெருமானின் தர்மம் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் தனித்துவம் மிக்க கருணை நிரம்பிய தர்மமாகும். மனித இனம் முழுவதற்கும் இணக்கமான நடைமுறையை வழிநடத்தும் தூய தர்மத்தால் ஈர்க்கப்பட்டு, மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஒவ்வொருவரும் இருந்தால், அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆவர்.

எனவே,உலகின் மிகப் பெரிய தர்மத்தில் தஞ்சம் புகுந்த உன்னத குடிமக்களாக, உலக உயிரினங்கள் மீது கருணை, பாசம் மற்றும் அன்புடன் மகத்தான வெசாக் நாட்களைக் கொண்டாடுவோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...