Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

T

The Leader Desk

மே 4, 2023 • 9:04 AM

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.
  • வரும் ஜூன் 1 ஆம் திகதியுன் டேவிட் மல்பஸ் தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறார்.
  • கடந்த சில வாரங்களில் மட்டும் 96 அரசு பிரதிநிதிகளை அஜய் பங்கா சந்தித்தார்.
  • இதற்காக 3 வாரங்களில் 8 நாடுகளுக்கு 63,643 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ஆதரவு கோரினார்.
எழுத்து அளவு:

திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். அதோடு வெளி முதலீடு, சர்வதேச வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் தான் டேவிட் மல்பாஸ் உலக வங்கியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடியும் முன்பே அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். வரும் ஜூன் 1 ஆம் திகதியுன் டேவிட் மல்பஸ் தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறார்.

இதனால் உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பரிந்துரைத்தார். மேலும் அஜய் பங்கா சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் தான் உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு தனக்கு ஆதரவு கோரும்படி பல நாடுகளுக்கு சென்று பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 96 அரசு பிரதிநிதிகளை அஜய் பங்கா சந்தித்தார். இதற்காக 3 வாரங்களில் 8 நாடுகளுக்கு 63,643 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ஆதரவு கோரினார். இதை அடுத்து அஜய் பங்கா குறித்து பலகட்டமாக ஆலோசனைகள் நடந்தன. நேற்று முன்தினம் 4 மணிநேரம் வரை அஜய் பங்காவிடம் நேர்க்காணல் செய்யப்பட்டது.

இது உலக வங்கியின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக்க 25 உறுப்பினர்கள் கொண்ட குழு அங்கீகரித்துள்ளது. அதாவது உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அடுத்த 5 ஆண்டுக்கான தலைவராக அவரை அங்கீகரித்துள்ளது.

அதாவது 25 உறுப்பினர்களில் ரஷ்யா புறக்கணித்த நிலையில் பிற 24 உறுப்பினர்கள் அஜய் பங்காவுக்கு ஆதரவு ஓட்டளித்துள்ளனர். இதன்மூலம் இந்திய வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது.

தற்போதைய உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் ஜூன் 1 ஆம் திகதி வரை பணியில் இருப்பார். இதனால் ஜூன் 2 ஆம் திகதி முதல் உலக வங்கி தலைவராக அஜய் பங்கா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...