Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சிறுநீரக சத்திர சிகிச்சையை இடைநிறுத்த பரிந்துரை

T

The Leader Desk

மே 4, 2023 • 9:03 AM

சிறுநீரக சத்திர சிகிச்சையை இடைநிறுத்த பரிந்துரை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடைநிறுத்துமாறு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
  • குறித்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி பொரளை, வெஸ்டர்ன் வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு இன்று (04) அழைக்கப்பட்ட போதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 9 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.
  • எவ்வாறாயினும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இடைநிறுத்துமாறு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரன உகுஸ்ஸ வெளியிட்ட தகவலுக்கு அமைய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி பொரளை, வெஸ்டர்ன் வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு இன்று (04) அழைக்கப்பட்ட போதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 9 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வழங்கிய அனுமதியை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...